உலகை ஆளுவோம்

வானாந்திர தேசம்..
வனம் போல மனசு..
வன்மம் தவிர்த்து அன்பு
பாசம் கொண்டு யாரோ
கட்டிய கூட்டில்.....

சிறு பறவைகள் நாங்கள்
சிறு சிறு ஆசைகளை..
சிறு சிறு கனவுகளை...
பகிர்ந்துக் கொண்டோம்...

இனி
இந்த வானாந்திரம் எங்களுடையது...
இந்த தேசாந்திரம் எங்களுடையது..
இந்த கூடு எங்களுடையது...
இந்த ஆசை எங்களுடையது..
இந்த கனவுகளும் எங்களுடையது...

நாங்கள் அரசாளுவோம்...இது
எங்கள் கோட்டை...
எங்கள் அன்பிலே ஆளுவோம்
இந்த உலகை....

கயல்

எழுதியவர் : கயல் (13-May-14, 2:48 pm)
பார்வை : 67

மேலே