நந்திதா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நந்திதா |
இடம் | : உடுமலை |
பிறந்த தேதி | : 20-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-May-2020 |
பார்த்தவர்கள் | : 269 |
புள்ளி | : 19 |
அந்தியில பூத்த மலர் அதிகாலை வாடுது எனோ
விட்டு சென்ற வெண்ணிலவை எண்ணியா ? இல்லை
தொட்டு சென்ற பனித்துளியை எண்ணியா ?
நெடுவனம் நீ என அறியாமல்
தொட எண்ணி தொலைதூரம்
பறக்கிறேன் சிறு பறவையாய் ...
குறுந்தீவு நீ என உணராமல்
கரை கடக்க முயல்கிறேன்
காதல் கடலுக்கு இரையாவது
தெரியாமல் !!!
பெருமழையின் முதல் துளி ஆணின் காமம் என்றால் !!!
சிறுதுளிகள் சேர்ந்த பெருவெள்ளம் பெண்ணவளது !!!
அண்டமே அடங்கும் அவள் அடிவயிற்று நெருப்பிற்கு !!
புடைத்த நரம்பில் அடைத்த அணுவை
ஐந்து நொடியில் அவசரமாய் சிந்தி
அசந்துறங்கும் ஆணுக்கு என்ன
வீண் செருக்கு !!!
செயற்கை ஆளுமை புறந்தள்ளி
இயற்கையாய் இணைந்து பார்
திகட்டா தேனும் புகட்டி மகிழ்வாள் !!
பூத்து குலுங்கும் பூ இதழ்தனிலே ...
ரசித்து பு சி ரகசியம் பேசு ....
ராத்தூக்கம் தொலை....
குறுக சொன்னால் தேன்கூட்டின்
ராணி ஈ அவள் "சேவகம்
செய் இல்லை செத்து மடி ....
அடிவானத்துல கொடி ஓடிய மின்னலொளியில்
மெல்ல சிரிக்கிறா மேக கூட்டமா ...
அழகா கோலமிட நினைச்சாலோ
அங்கொன்னும் இங்கொன்னுமா புள்ளி
வைக்கிறா வாசலிலே...
போட்ட கோலத்துல குறை கண்டது யாரோ ?
கோவத்துல கொட்டி தீத்து
குளம் ஒன்னு கட்டிவச்சுட்டா
கொல்லபுரத்துல ...
கொல்லபுரத்துல பூத்த மல்லி எல்லாம்
அள்ளி எடுத்து போயி ஆத்தங்கரையில போட்ட
கள்ளி அவதானோ ?
சோறு போடு விவசாயி
சொல்லி மாளாத சோகம் எல்லாம்
கிள்ளி எறிஞ்சுவ அவதானோ ?
கள்ளி வளந்த ஏறி எல்லா கெண்டமீனு
துள்ளி குதிக்குது அள்ளி குடிக்காம
தள்ளி போறது என்ன மச்சானு
வம்பு இழுக்கும்
வள்ளி மகளும் அவதானோ ???
தன் நலம் மறந்தவள் தாய் என்றல்
தன்னையே மறந்தவன் அல்லவா தந்தை ...
உறவில் தாய்க்கு நிகர் இல்லை....என்றாலும்
உன் தாய்க்கும் தலை பிள்ளை உன் தந்தையே மறவாதே மகனே ...
உள்ளத்திலே வள்ளல் என்றாலும்
தன் பிள்ளைக்காக தானம் சுருக்கி ..
தானும் சுருங்கி வாழ்பவன் அல்லவே தந்தை ....
ஆழ்கடல் போன்றது அப்பாவின் அன்பு..
அதை நீ கரை ஏறும் பொது உணர்வாய் ..
அப்பாவின் அமைதியுலும் ஆயிரும் அறிவுரை உண்டு ஆழ் மனதில் ஆயிரும் கனவுகளும் உண்டு ...
ஆச்சரியம் இல்லை அனைத்தும் உனக்கானது என்பதில்
என்பதிலும் என்ன வேண்டும் என்று கடவுள் கேட்டால் என் பதில் ஒன்றே ..
என் தந்தை போன்ற பிள்ளை வேண்டும் ...