மழை
அடிவானத்துல கொடி ஓடிய மின்னலொளியில்
மெல்ல சிரிக்கிறா மேக கூட்டமா ...
அழகா கோலமிட நினைச்சாலோ
அங்கொன்னும் இங்கொன்னுமா புள்ளி
வைக்கிறா வாசலிலே...
போட்ட கோலத்துல குறை கண்டது யாரோ ?
கோவத்துல கொட்டி தீத்து
குளம் ஒன்னு கட்டிவச்சுட்டா
கொல்லபுரத்துல ...
கொல்லபுரத்துல பூத்த மல்லி எல்லாம்
அள்ளி எடுத்து போயி ஆத்தங்கரையில போட்ட
கள்ளி அவதானோ ?
சோறு போடு விவசாயி
சொல்லி மாளாத சோகம் எல்லாம்
கிள்ளி எறிஞ்சுவ அவதானோ ?
கள்ளி வளந்த ஏறி எல்லா கெண்டமீனு
துள்ளி குதிக்குது அள்ளி குடிக்காம
தள்ளி போறது என்ன மச்சானு
வம்பு இழுக்கும்
வள்ளி மகளும் அவதானோ ???