உன்னழகு
வானவில் அப்பப்போ வானில்
வந்து போகும் பேரழகு
வான் நிலா வளர்ந்தும் தேய்ந்தும்
வளரும் பேரழகு
பெண்ணே நீ என்னருகே
எப்போதும் நான் கண்டு
ரசிக்கும் பேரழகு என்னவளே
ஏனெனில் நான் ரசிக்கும்
உன்னழகு எனக்கு மட்டுமே
தெரியும் உந்தன் இதயம்