தந்தை
தன் நலம் மறந்தவள் தாய் என்றல்
தன்னையே மறந்தவன் அல்லவா தந்தை ...
உறவில் தாய்க்கு நிகர் இல்லை....என்றாலும்
உன் தாய்க்கும் தலை பிள்ளை உன் தந்தையே மறவாதே மகனே ...
உள்ளத்திலே வள்ளல் என்றாலும்
தன் பிள்ளைக்காக தானம் சுருக்கி ..
தானும் சுருங்கி வாழ்பவன் அல்லவே தந்தை ....
ஆழ்கடல் போன்றது அப்பாவின் அன்பு..
அதை நீ கரை ஏறும் பொது உணர்வாய் ..
அப்பாவின் அமைதியுலும் ஆயிரும் அறிவுரை உண்டு ஆழ் மனதில் ஆயிரும் கனவுகளும் உண்டு ...
ஆச்சரியம் இல்லை அனைத்தும் உனக்கானது என்பதில்
என்பதிலும் என்ன வேண்டும் என்று கடவுள் கேட்டால் என் பதில் ஒன்றே ..
என் தந்தை போன்ற பிள்ளை வேண்டும் ...