காக்கையின் கண்ணீர்

சாலை ஓரமரங்களில் தங்கும்
மாலை நேரப்பறவை நான்..
சோலை வனசாலைகள் பாலை வானம் ஆனதே ...
மாசுபட்ட உலகிலே மனிதம் தேடி அலைகிறேன் ...
மரங்கள் இருந்த இடமெல்லாம் மனிதமிருகம் திரியுதே ...
மாடி வீடு கட்டத்தான் மலையும் மணலும் திருடுதே ...
அறுகுளம் ஏறி எல்லாம் அடையாளம் கானாலேயே
ஆர்ப்பரிக்கும் கடலையும் அற்ப மனிதன் விடலேயே ...
வேள்வி தீயின் விறகாக எந்தன் வீடு எரியுதே ...
மனிதா உன் அழிவு காலம் விரைவிலே
அமைதி காக்கிறேன் அதுவரையிலே ...

எழுதியவர் : (26-May-20, 6:12 pm)
சேர்த்தது : நந்திதா
பார்வை : 103

மேலே