மறக்க முடியல

மறக்கத்தான் நினைக்கிறேன்
மறந்திட முடில /
சொல்லி முடித்திடத் தான்
நினைக்கிறேன்./
சொல்லி முடித்ததிடவும் முடியல /
காரணங்கள் தான் என்னவோ?
அது கண்ணீரில் விழுந்து வளர்ந்த கதையல்லவோ/

இந்திய இராணுவம் அணிவகுத்த
கதை மறக்க முடியல /
அவன் நீதி மறந்து அநீதி புரிந்த
கதை மறக்க முடியல /
விடியும் முன்னே இல்லம் நுழைந்த
கதை இன்னும் மறக்க முடியல /
கன்னியெரெல்லாம் கை பிடித்து
இழுத்த கதை மறக்க முடியல/

கண்ட இடமெல்லாம் கொண்டு
அமர்த்தியதை மறக்க முடியல /
பேரீச்சை முற்களோடு மட்டையைக்
கொண்டு /
தாக்கி இரத்தம் சுவைத்த கதை
மறக்க முடியல /
அக்கொடுமை எனது தந்தைக்கும்
என் கண் எதிரே /
அரங்கேறியது அதை நெஞ்சில் இருந்து
அழிக்க முடியல /

சுற்றி வளைப்பு என்னும் பெயரில் /
நீர் இன்றி ஆகாரம் இன்றி /
காலை முதல் மாலை வரை /
இருத்திய நாட்கள் மறக்க முடியல /
அன்றாடக் கூலிகளையெல்லாம் /
நின்று போர் புரியும் வீரர்கள் என்று/
கொன்று குவித்த அந்த நாட்கள் மறக்க முடியல /

வல்லரசு நாடு வந்திறங்கிய பிற்பாடு /
கிழக்கு வெளிக்கும் நமக்கும் என்ற ஆவா /
அறுக்கப் பட்டு நம்மை அவர்களும் ஒடுங்கி நடுங்க விட்ட /
காட்சி கண்ணை விட்டு மறைக்க முடியல/
அவன் தமிழனை கசக்கிப் பிழிந்ததை/ இன்று வரை மன்னிக்க முடியல /

ஈவு இரக்கம் அற்றவன் வட இந்திய இராணுவம் /
அவனை நாம் மறந்தால் ஈழத் தமிழன் அல்ல /
கொடுரனைக் கொண்டுபோ /
காமா வெறியனை ஏற்றி விடு/
இந்திய அரசே உந்தன் படையைத் திருப்பியெடு/

நாசக் காரன் அவன் நாடு திரும்பவே /
முதுமை வயதிலும் உண்ணா விரதம்/ இருந்து உயிர்த் தியாகம் செய்த /
அன்னை பூவதியின் தியாகத்தை
மறக்க முடியல/

மறக்க முடியாத கதை நெஞ்சுக்குள்
தேங்கிய நிலையில /
நாளும் பொழுதும் எழுகிறது நெஞ்சுக் குழியில் நினைவலையில/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (26-May-20, 11:06 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : marakka mudiyala
பார்வை : 265

மேலே