கலைச்செல்வன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கலைச்செல்வன்
இடம்:  கூடுவாஞ்சேரி
பிறந்த தேதி :  13-Mar-2003
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2022
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  3

என் படைப்புகள்
கலைச்செல்வன் செய்திகள்
கலைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2023 4:10 pm

முகிலில் பிறந்தேன்,
ஆகாயத்தில் வளர்ந்தேன்
கனவை அடைய வாழ்கிறேன்
சேர்ந்த நீரில் தனித்துவமாக
நதியோடு.

சேர்ந்த வரை விளங்கவில்லை
பாதையில் ஆயிரம் குழப்பங்கள்
ஓடும் நேரம் தெளிந்தது.

வீசும் எதிர்காற்றோ என்னை
தடுக்க
எரியும் கற்களோ உதவுகிறது
மறைமுகமாக.

கலக்கும் கழிவுகள்
மாசு படுத்தினாலும்
குறிக்கோள் ஒன்று தான்.

கடக்கும் பாதைகள்
எதுவாயினும்
பயணம் ஒன்று தான்
ஆனால்,
அடையும் இலக்கு
எதுவென்று முடிவெடுப்பது
நான்
நான் மட்டுமே!

இலக்கை அடைந்து பின்னும்
இன்னும் ஓட துணிகிறேன்
காலம் என்னும் நதியினிலே.

மேலும்

கலைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2022 4:58 pm

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

தனிமையை நினைத்து;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

தொலைதூரம் பயணிக்கும் போது;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

குடைப்போல் விரிந்து இருப்பதைப் பார்த்து;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

கடலில் சூரியன் எழுந்து வருவதைப் பார்த்து;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

பருந்துப் பறப்பதைப் பார்த்து;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

மழைத்துளிகள் வருவதைக் கண்டு;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

காயப்படும் நேரத்தில்;

தொடு வானம் தொட்டுவிட தான் தவித்தேன்

ஆனால்,

தொடும்போது தொலைவில் முடிவில்லாமல் சென்றது

என் மனதைத் தொட்டுவிட்டு.

மேலும்

கலைச்செல்வன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2022 3:34 pm

நான் குழந்தையாக இருக்கும்போது
ஏன் என் அம்மா உன்னைக்காட்டி
எனக்கு சோறு ஊட்டினாள்?

நீ முழுமையாக இருந்தால் பௌர்ணமி;
அதுவே,
நீ இல்லையேல் அது அமாவாசை
இது ஏன்?

நீ ஏன் சூரியனிடமிருந்து
ஒளியை வாங்க வேண்டும்;

நீ ஏன் பூமியை சுற்றி வர வேண்டும்!

கிரகணத்தின்போது உன்னை ஏன் பூமி வந்து மறைக்க வேண்டும்

இதற்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது

ஒன்றைத் தவிர!
அது உன்னை ரசிக்க.

மேலும்

கருத்துகள்

மேலே