தொடு வானம்

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

தனிமையை நினைத்து;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

தொலைதூரம் பயணிக்கும் போது;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

குடைப்போல் விரிந்து இருப்பதைப் பார்த்து;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

கடலில் சூரியன் எழுந்து வருவதைப் பார்த்து;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

பருந்துப் பறப்பதைப் பார்த்து;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

மழைத்துளிகள் வருவதைக் கண்டு;

தொடு வானம் தொட்டுவிட தவித்தேன்

காயப்படும் நேரத்தில்;

தொடு வானம் தொட்டுவிட தான் தவித்தேன்

ஆனால்,

தொடும்போது தொலைவில் முடிவில்லாமல் சென்றது

என் மனதைத் தொட்டுவிட்டு.

எழுதியவர் : கலைச்செல்வன். ஏ (2-Oct-22, 4:58 pm)
சேர்த்தது : கலைச்செல்வன்
Tanglish : thotu vaanam
பார்வை : 48

மேலே