பெண்ணால் பற்பல

மந்தையாய் புவியில் கூடிய மானிடர்
சிந்தையில் தோன்றிய எண்ண ஓட்டமே
சந்தையால் எவரின் உழைப்பையும் விலையால்
சொந்தமாய் ஆக்கிட செய்தனர் சூழ்ச்சியை

பெண்ணால் பற்பல கலவரம் ஆயின
மண்ணால் மிகுதியாய் பூசலும் தோன்றின
எண்ணத் தில்தோன் றியகீழ் நிலைதுர்
எண்ணத் தால்எங் குமேசண் டைகளே

மழையால் மண்ணில் மகத்துவம் தோன்றின
தழலால் உணவெனும் உண்ணதம் கிடைத்தன
பிழையால் நல்லதாய் பொருளும் வந்தன
உழைப்பால் யாவரும் சிறப்பைப் பெற்றனர்

பிள்ளைகள் பிறந்தன பிணிகளும் வந்தன
உள்ளமும் குறுகின இல்லமும் தோன்றின
பள்ளமாய் மனிதருள் பலவகை எண்ணமே
உள்ளவை யாவுமே உரிமையுள் வந்ததே

சொத்தினால் சொந்தமும் பிரிந்தே போயின
பித்துப் பிடித்ததாய் மக்களும் மாறினர்
யுத்தமும் சத்தமும் எங்குமே முதன்மையாய்
மொத்த உலமும் திரும்புதே ஆதியுள்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Oct-22, 9:11 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 49

மேலே