பூவெனும் மனதுள்

ஏழையின மென்று ஒன்று தோன்றிட
காரண மானப் பணத்தையே படைத்த
மானிட பதரை குன்றின் மீதேற்றி
கொடுரமாய் கொலையினை செய்யிணும் பாவமோ.

அழுவதும் தொழுவதும் இறையின் பாதம்
என்றே எண்ணி வைத்தவன் செய்தது
மாபெரும் இல்லமாம் அமைதியின் கூடமாம்
கோவெனும் அதிர்வதின் குவியலின் கோயிலே

நாளினை படைத்தது புவியுடன் பரிதியே
கோளில் வாழ்விடம் உடையது பசும்புவி
நிறைந்த உணவுகள் விளைய காரண
மாமழை பொழிவதும் பகலவன் கதிராலே

நிலத்துடன் மழையும் வானக் கதிரும்
பொதுவாய் கிடக்கு உயிர்கள் வளரவே
எதிலும் தொல்லை செய்தே வாழும்
மானிட பிறவியால் கெட்டது ஞாலமே.

பூவெனும் மனதுள் தேனாய் எண்ணம்
இருந்தால் நன்மை பொங்கி வருமே
மாறியே நஞ்சு சிறிதாய் புகுந்தால்
யாவுமே தொல்லையால் பாழ்படும் பாரிரே.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Oct-22, 11:15 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 59

மேலே