நடிகர் திலகம் பற்றி ஒரு கவிதை ……

நானறிந்த நற்றமிழன்
நடிப்புக்கோர் நாயகன்!
சத்ரபதி சிவாஜியா
கனல்கக்கும் முக்கண்ணனா
கப்பலோட்டிய தமிழனா
கயத்தாற்றின் கட்டபொம்மனா
நடைதளர்ந்த அப்பரா
சிம்மநடைபோடும் சோழனா
கொடைவேந்தன் கர்ணனா
விவேக ஆனந்தரா
அத்தனையும் அவரேதான்
இன்னும்
எத்தனயோ வேடங்கள்
எழுதத்தான் இடமில்லை
அவரது
விழி பேசும் இமை பேசும்
விரல் பேசும் நடை பேசும்
வாய் பேசா
மொழியாவும் முகம் பேசும்
அவர்
பேசாத வசனம் இல்லை
படிக்காத மேதையவர்
நடிக்காத வேடமில்லை நடிப்பில்
எட்டாத சிகரமில்லை
அவர்
தெற்கதனில் உதித்திருந்தால்
திக்கெட்டும் புகழ்ந்திருக்கும்
ஆனால்
தமிழ்நாட்டில் பிறந்ததனால்
நமக்கெல்லாம் பொற்காலம் !!

எழுதியவர் : பிறைநிலவன் (3-Oct-22, 11:46 am)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 33

மேலே