கலைவாணியே

வாணியே கலைவாணியே
வெண்பட்டாடை உடுத்தி
வெண் தாமரையில்
வீற்றிருக்கும் தேவியே

விஜயதசமியில்
வித்யாரம்பம் செய்து
உன்னை துதிப்போர்க்கு
காலத்தால் அழிக்க இயலா
கல்வி செல்வத்தை அள்ளிக்
கொடுத்தருளும் தேவியே

கலைமகளே
இந்நன்னாளில் உன்னிடம் வேண்டுவதெல்லாம்
கல்வியை கற்பிக்கும்
கல்விக்கூடங்கள் எல்லாம்
கல்வியை விற்கும் கூடங்களாக மாறியிருக்கும்
நிலைமாற வேண்டும்

கலைமகளே
நானிலம் எங்கும் தரமான
கல்வியை ஆசான்கள்
கற்பிக்க வேண்டும்

வேலியே பயிரை மேய்ந்தது
என்பதை போல்
கல்வியோடு நற்பண்பை
போதிக்கும்
ஆசான்களில் சிலர்
தரம் தாழ்ந்து
பெண் சிறார்களை சீரழிக்கும்
நிலை மாறவேண்டும்

கல்வியா செல்வமா வீரமா என்ற வாதங்கள் வேண்டாம் அதர்மம் அழிந்து
தர்மம் தலைத்தோங்க
முப்பெரும் தேவியர்களையும்
வணங்கி மகிழ்வோம்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Oct-22, 6:31 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 233

மேலே