சிறுவர்கள் நாங்கள்

புது உலகம் காண
பூமியில் பூத்தவர்கள்
நாங்கள்...

வெளி உலகில்
கால் பதித்தால்
வெறியர்கள் எம் முன்னே
வேட்டையாட
காத்திருக்கின்றனர்...

புது உலகின்
புதுமைகளை
உணர முன்னே
புதைகுழியில் புதைத்திட புறப்படுகின்றனர்...

கவலைகளின்றி
கழியும் அழகிய
பருவமிது எமக்கு
சந்தோஷமாய் சிறகுகளை
உயர விரித்துப் பறந்திட
உதவிடுங்கள் எமக்கு...

சிதைப்பதை நிறுத்தி
சிறப்பான உலகை
எமக்களியுங்கள்...

இத் தினத்தில்
மட்டுமல்லாது
எத் தினத்திலும்
எத்திக்கும் எம்மை
வளர்த்திட
எம்மோடு
எம் கரங்களைக் கோருங்கள்...

நாளைய தலைமுறையாய்
வளரும் எங்களுக்கு
புதுமைகள் படைத்து
சரித்திரத்தில் இடம் பிடித்திட
நல்ல விதைகளை
இப்பொழுதே
விதைத்திடுங்கள்...

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (4-Oct-22, 11:11 am)
சேர்த்தது : அறூபா அஹ்லா
Tanglish : SIRUVARKAL naangal
பார்வை : 57

மேலே