பாதங்களும் வணங்கப்படும்
சாதி, மதம் வேண்டாம்
சகதியில் தள்ளி விடும் ,
சமத்துவம் இல்லாததால்
சாதிக்க நினைப்பவர்களையும்
சர்ச்சையில் சிக்க வைக்கும்
பொறுப்பில் உள்ளோர்
பாவப்பட்ட மக்களுக்கு
பக்குவமா எடுத்து கூறி
ஒற்றுமையோடு வாழ
வழி காட்டுங்கள்
பாதகங்கள் இல்லாமல்
பாமர மக்களும்
பலனடைய உதவிடுங்கள்
பாதகங்கள் அழியட்டும்--உங்கள்
பாதங்களும் வணங்கப்படும்