காலம் என்னும் நதியினிலே

முகிலில் பிறந்தேன்,
ஆகாயத்தில் வளர்ந்தேன்
கனவை அடைய வாழ்கிறேன்
சேர்ந்த நீரில் தனித்துவமாக
நதியோடு.

சேர்ந்த வரை விளங்கவில்லை
பாதையில் ஆயிரம் குழப்பங்கள்
ஓடும் நேரம் தெளிந்தது.

வீசும் எதிர்காற்றோ என்னை
தடுக்க
எரியும் கற்களோ உதவுகிறது
மறைமுகமாக.

கலக்கும் கழிவுகள்
மாசு படுத்தினாலும்
குறிக்கோள் ஒன்று தான்.

கடக்கும் பாதைகள்
எதுவாயினும்
பயணம் ஒன்று தான்
ஆனால்,
அடையும் இலக்கு
எதுவென்று முடிவெடுப்பது
நான்
நான் மட்டுமே!

இலக்கை அடைந்து பின்னும்
இன்னும் ஓட துணிகிறேன்
காலம் என்னும் நதியினிலே.

எழுதியவர் : (19-May-23, 4:10 pm)
சேர்த்தது : கலைச்செல்வன்
பார்வை : 39

மேலே