அரசே வாழி
எக்காளமிட்டு எமனுடன் குலவி
துன்பங்களை மறந்திடுவாயென
ஏழை தொழிலாளர்களை ஊக்குவித்து
கள்ளச்சாரயமெனும் விஷத்தைக்
கொடுத்து,
உயிர்களைப் பறித்து
பதிலுக்கு இதோ தந்திட்டோம்
பத்து லட்சம் இழப்பீடென
பெருமையுடன் பறைசாற்றிக்கொள்ளும்
அரசே வாழி.
சம்பத் குமார்