நிலா
நான் குழந்தையாக இருக்கும்போது
ஏன் என் அம்மா உன்னைக்காட்டி
எனக்கு சோறு ஊட்டினாள்?
நீ முழுமையாக இருந்தால் பௌர்ணமி;
அதுவே,
நீ இல்லையேல் அது அமாவாசை
இது ஏன்?
நீ ஏன் சூரியனிடமிருந்து
ஒளியை வாங்க வேண்டும்;
நீ ஏன் பூமியை சுற்றி வர வேண்டும்!
கிரகணத்தின்போது உன்னை ஏன் பூமி வந்து மறைக்க வேண்டும்
இதற்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது
ஒன்றைத் தவிர!
அது உன்னை ரசிக்க.