குபேரன் யார்

குபேர விளக்கை வாங்கி
வீட்டில் தீபமேற்றி வைத்தால்
துன்பங்கள் மறைந்து
இன்பங்கள் பெருகும்

முட்டாள் தனமான
விளம்பரங்கள்
முட்டாள் தனமான
மனிதர்களின்
பலவீனங்களை வீழ்த்தி
பணத்தை சுரண்டும் யுக்தி

மனிதர்களை ஏமாற்றி
குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கும் மனிதன் குபேரனாகி விடுகிறான் என்பது மட்டும் நிச்சயம்...!!

ஏமாந்து போய்
விளக்கு வாங்கியவன்
வாழ்க்கை
இருளில்தான் இருக்கு
என்பது நிதர்சனம்...!!

குறுக்கு வழியில்
வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா
கொள்ளையடிப்பதில்
வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா....
பட்டுக்கோட்டையாரின்
பாடல் வரிகள் நினைவில்
வந்து மோதியது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Sep-22, 12:01 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kupEran yaar
பார்வை : 213

மேலே