அகிம்சையின் அடையாளம்

அகிம்சையின் அடையாளம்.......!!
--------------------------------------------------------------------
பண்ணிரண்டு நாளிருந்து
அவன் உருகினான்
தண்ணீர் பருக மறுத்து
மகன் தவம் கிடந்தான்
விண்ணில் இருந்து
தேவரெல்லாம் பாத்திருந்தார்
நல்லூர்வீதி நெடுக
மக்கள் காத்திருந்தார்
பசியை துறந்து மகன்
தவம் கிடந்தான்
நாங்கள் பாத்திருக்க
மேடையிலே கண்சொருகினான்
அந்த வீரனுடல்
கையளித்தோம் சுதுமலையிலே.
🔥 நாகதேவன் ஈழம்