அஸ்தமனம்

இன்றைய நாள்
சிலருக்கு மகிழ்ச்சி
பலருக்கு வருத்தம்
சிலருக்கு வெற்றி
பலருக்கு போராட்டம்...!!

ஆனால்...
இன்று காலையில்
உதித்த சூரியனோ
எவ்வித சலனமின்றி
மாலையில்
அஸ்தமனமாகி
நாளைய பொழுது
நல்லதாக விடியுமென்ற
நம்பிக்கையை
பலரது மனதில்
விதைத்து செல்கிறது ....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Sep-22, 8:41 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 397

மேலே