Manimala Mathialagan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Manimala Mathialagan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 3 |
சூரியா......!!?
“எங்களுக்குள் ஏற்பட்டிருப்பது காதலாகயிருக்குமோ என எனக்கு....”
“போதும்டா... மூச்சுக்கு முந்நூறு தடவைக்குமேல இதையே சொல்றே...!”
அதுவரை பூரிபோலிருந்த பரமுவின் இதயம் பரோட்டாவைப்போலானது.
“உன்னோட பைத்தியக்காரத்தனத்துக்கு அளவில்லையா....! இதயத்துக்குள்ள அம்பைவிட்டு ஒட்டி சுவத்தயே நாசமாக்கியிருக்கே, கண்றாவியா எழுதி கவிதைங்கிறே, பஸ்சுல ஒருத்தி பார்த்து சிரிச்சிட்டான்னு என்னைப்போட்டு கொல்றியேடா...! ஓவர்டைம் பாத்துட்டு ரூமுக்குவந்து சமைச்சி சாப்பிட்டுட்டு தூங்கப்போகவே பன்னெண்டாகுது, பேய் பிரேக்பாஸ்ட் எடுத்துக்குற நேரத்துலகூட உனக்குள்ள காதல் பொங்கணுமா....? அதை எங்கிட்ட கொட்டணுமா
ஜல்லிக்கட்டு
மாட்டையடக்குவதா வீரமென்று
மதிகெட்டு பேசினர்
மாந்தர் பலர்!
மரபென்று நாங்களுரைத்துமது
விழலுக்கிரைத்த நீராய்
வீணாய்ப்போனது!
சீற்றமடைந்த சிங்கங்கள்
சீறிக்கொண்டு கிளம்பினோம்
மரினாவை நோக்கி!
மருண்டுபோன மாந்தர்
இருண்டுபோன முகத்துடன்
வெள்ளைப்புறாவை பறக்கவிட
வெற்றிகொண்ட காளையர்
வீரம்விளைந்த மண்ணின்
புகழை நிலைநிறுத்திட
புறப்பட்டோம் வீறுகொண்டு!
மரபினை நையாண்டிசெய்து
மடமையுடன் வாழும்
மானமற்ற உடல்களுக்கு
இவ்வெற்றி உணர்த்துமா
வீரம்விளைந்த மண்ணின்
அருமைபெருமைகளை!
புன்னகை
மாலையிட்ட மணாளனிழைத்த துரோகத்தால்
மரித்துப்போனதே அவளிதழிலிருந்த மந்தகாசப்புன்னகை – தன்
மக்களின் நலன்கருதியவள் மயானத்திலிருந்ததை தோண்டியெடுத்து
புத்துயிரூட்டி புதுப்பொலிவேற்றி
நித்தமும் நீரூற்றி காத்திட்டபோதிலும்
நிரந்தரமாய் அவள்புன்னகையில் உயிர்ப்பில்லையே!
என்றுமாறுமிந்த ஈனத்தனம் ஆண்வர்க்கத்திடம் – எந்நாளும்
ஏமாந்துபோக பெண்ணினமென்ன பேதையர் கூட்டமா?
பொறுமைக்குமோர் எல்லையுண்டு என்னினமே
போற்றுதலுக்குரிய பூமாதேவியே அதையிழந்து பிளக்கையில்
தூற்றி வீசியெறி உனை துச்சமாய் எண்ணியவனை
புல்லுருவிபாய்ந்த மரத்தை பூஜிக்காதே என்றும்!
பிள்ளைகள் வாழ்வே பெரிதென்றெண்ணி
சிறுமைபடுத
ஜல்லிக்கட்டு
மாட்டையடக்குவதா வீரமென்று
மதிகெட்டு பேசினர்
மாந்தர் பலர்!
மரபென்று நாங்களுரைத்துமது
விழலுக்கிரைத்த நீராய்
வீணாய்ப்போனது!
சீற்றமடைந்த சிங்கங்கள்
சீறிக்கொண்டு கிளம்பினோம்
மரினாவை நோக்கி!
மருண்டுபோன மாந்தர்
இருண்டுபோன முகத்துடன்
வெள்ளைப்புறாவை பறக்கவிட
வெற்றிகொண்ட காளையர்
வீரம்விளைந்த மண்ணின்
புகழை நிலைநிறுத்திட
புறப்பட்டோம் வீறுகொண்டு!
மரபினை நையாண்டிசெய்து
மடமையுடன் வாழும்
மானமற்ற உடல்களுக்கு
இவ்வெற்றி உணர்த்துமா
வீரம்விளைந்த மண்ணின்
அருமைபெருமைகளை!