Manimala Mathialagan- கருத்துகள்
Manimala Mathialagan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [29]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [17]
ஜல்லிக்கட்டு
மாட்டையடக்குவதா வீரமென்று
மதிகெட்டு பேசினர்
மாந்தர் பலர்!
மரபென்று நாங்களுரைத்துமது
விழலுக்கிரைத்த நீராய்
வீணாய்ப்போனது!
சீற்றமடைந்த சிங்கங்கள்
சீறிக்கொண்டு கிளம்பினோம்
மரினாவை நோக்கி!
மருண்டுபோன மாந்தர்
இருண்டுபோன முகத்துடன்
வெள்ளைப்புறாவை பறக்கவிட
வெற்றிகொண்ட காளையர்
வீரம்விளைந்த மண்ணின்
புகழை நிலைநிறுத்திட
புறப்பட்டோம் வீறுகொண்டு!
மரபினை நையாண்டிசெய்து
மடமையுடன் வாழும்
மானமற்ற உடல்களுக்கு
இவ்வெற்றி உணர்த்துமா
வீரம்விளைந்த மண்ணின்
அருமைபெருமைகளை!