NRK - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : NRK |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Dec-2018 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 13 |
என் காதலி என்னைத் தேடுகிறாள்
வழி விடு காலமே
என் கழல்விழி தமிழ் பேசுகிறாள்
செவிகொடு இளம் குயிலே
என் தேவதை உறங்குகிறாள்
சாமரம் வீசு தென்றலை
அவள் பார்வை விழுந்த இடத்தினில்
காதல் செடி முளைத்தது
அவள் பாதம் பட்ட இடத்தினில்
சந்தன மணம் வீசியது
என் காதலி என்னை அழைக்கின்றாள்
துணை செய் மேகமே
அவள் கூந்தலின் மணம் முகர்ந்து
மீண்டும் நாம் திரும்பலாம்
அவள் இதழின் நிறம் அறிந்து
அந்த மகிழ்ச்சியில் திளைக்கலாம்
அவள் இடையின் அளவறிந்து
மயக்க நிலையில் வாழலாம்
அவளிடம் பேச என்னிடம்
வார்த்தை இல்லை
அவளின் முகம் காண
என் நெஞ்சில் துணிவில்லை
அவளைக் கவிர்ந்
உன் கண்னை இன்னும் காணவில்லை
என் இதயம் தான் பேசவில்லை
என் புல்வெளியில் ஈரமில்லை
அந்த ஏக்கம் தான் தீரவில்லை
சுட்டுவிட்ட சுடரொளி தேய்கின்றதே
இம் முறையும் பூ மணம் வீசுகின்றதே
கடந்த இரவுகள் திரும்புமா
கனத்த மனம் தான் தூங்குமா
வாழ்வின் அர்த்தம் தான் புரியுமா
பல்லக்கில் அவள் ஏறி வருவாளோ
உள்ளுக்குள் அவள் புகுந்து சுடுவாளோ
காதலில் சிறை செய்து விடுவாளோ
என்னைத்தான் சிறை வைத்து விடுவாளோ
விழிகளால் விளக்கேற்ற வா
தனிமை என்பது கருமையா
உன் இதயம் என்ன வெண்மையா
கருமை வெண்மையும் தான் கூடுமா
என் இதயத்தின் துடிப்பாக மாறினாள்
என் வாழ்க்கையின் பொருளாக ஆகினாள்
என் கவிதை
வளைந்து நெளிந்து ஓடும் நதிகள்
கடலை அடைந்ததே
வளர்ந்து நெடிந்து மலைகள் மரங்கள்
குடைகள் ஆனதே
பருவம் வந்த மொட்டுக்கள் யாவும்
பூக்கள் ஆனதே
இரவின் மடியில் நிலவு உறங்க
இரவும் தாயானதே
மழையின் ஒரு துளி இந்த
மண்ணில் விழுந்ததே
காத்திருந்த நிலம் மணம்
வீசி மகிழ்ந்ததே
புது வரவு புதியதாக புதிய
நாளில் புகுந்ததே
புது உறவு மலர்வதற்கு ஓர்
விடியலும் பிறந்ததே
விரைந்து வழிந்து தெளிந்த
அருவி ஓடையானதே
மலையின் மார்பை வெண்மையாக்கி
சுத்தம் செய்ததே
சேர்ந்து பிரிந்து ஓடும் மேகஙகள்
மலையை தழுவியதே
மனமும் குளிர்ந்து மகுடம் சூட்டி
இயற்கையை வாழ்த்தியதே
மலர்ந்த மொட்டு
பசுமை வயல்
தெளிந்த நீரோடை
பாலைவனத்தின் ஏக்கக்
குரல் மண்ணோடு புதைந்தது....