உணர்வு

என் காதலி என்னைத் தேடுகிறாள்
வழி விடு காலமே

என் கழல்விழி தமிழ் பேசுகிறாள்
செவிகொடு இளம் குயிலே

என் தேவதை உறங்குகிறாள்
சாமரம் வீசு தென்றலை

அவள் பார்வை விழுந்த இடத்தினில்
காதல் செடி முளைத்தது

அவள் பாதம் பட்ட இடத்தினில்
சந்தன மணம் வீசியது

என் காதலி என்னை அழைக்கின்றாள்
துணை செய் மேகமே

அவள் கூந்தலின் மணம் முகர்ந்து
மீண்டும் நாம் திரும்பலாம்

அவள் இதழின் நிறம் அறிந்து
அந்த மகிழ்ச்சியில் திளைக்கலாம்

அவள் இடையின் அளவறிந்து
மயக்க நிலையில் வாழலாம்

அவளிடம் பேச என்னிடம்
வார்த்தை இல்லை

அவளின் முகம் காண
என் நெஞ்சில் துணிவில்லை

அவளைக் கவிர்ந்திட என்னிடம்
எதுவும் இல்லை

மேகத்திரை மெல்ல விலக
அந்த தங்க நிலா மெல்ல எழுந்தது

அவளைப் பார்த்த நிமிடம் என்
உடலில் உயிர் இல்லை

மௌனமே என் மொழியாக
உணர்வுகளே என் வார்தைகளானது

எழுதியவர் : (1-Jul-20, 1:11 pm)
சேர்த்தது : NRK
Tanglish : unarvu
பார்வை : 50

மேலே