இயற்கை எழில்
வளைந்து நெளிந்து ஓடும் நதிகள்
கடலை அடைந்ததே
வளர்ந்து நெடிந்து மலைகள் மரங்கள்
குடைகள் ஆனதே
பருவம் வந்த மொட்டுக்கள் யாவும்
பூக்கள் ஆனதே
இரவின் மடியில் நிலவு உறங்க
இரவும் தாயானதே
மழையின் ஒரு துளி இந்த
மண்ணில் விழுந்ததே
காத்திருந்த நிலம் மணம்
வீசி மகிழ்ந்ததே
புது வரவு புதியதாக புதிய
நாளில் புகுந்ததே
புது உறவு மலர்வதற்கு ஓர்
விடியலும் பிறந்ததே
விரைந்து வழிந்து தெளிந்த
அருவி ஓடையானதே
மலையின் மார்பை வெண்மையாக்கி
சுத்தம் செய்ததே
சேர்ந்து பிரிந்து ஓடும் மேகஙகள்
மலையை தழுவியதே
மனமும் குளிர்ந்து மகுடம் சூட்டி
இயற்கையை வாழ்த்தியதே