தீ கோ நாராயணசாமி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தீ கோ நாராயணசாமி |
இடம் | : தீவளூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 477 |
புள்ளி | : 36 |
ஆசிரியர், கல்வியாளர்.,கவிஞர்.
கனவு நனவுதொல்லை தாங்க முடியவில்லை
தூக்கி எறிந்தேன் மொபைலை
அப்பாடா!
ஒலித்தது செல்பேசி
கலைந்தது கனவு
கைப்பேசியில்
'ஹலோ' என்றேன் அனிச்சையாய்
நொடியில் குலைந்தது நிம்மதி!
தியானம்
நெடுஞ்சாலையில்
விரையும் வாகனங்களின்
ஓயாத இரைச்சலாய்
எழும் எண்ணங்களை
அமைதியாய் ஊடுருவி,
எங்கும் நிறைகிறது; நிலைக்கிறது;
குழலாய் இழைகிற
ஒரு குயிலோசை.
-
எல்லாக் குடிசைகளிலும் ஒளிர்கிறது
ஒரேயொரு இரவு விளக்கு -
பௌர்ணமி நிலா.
நீல வானில்
நீந்தும் வெண்மேகங்கள்
நிறைய விண்மீன்கள்.
வானம் பார்த்தவனுக்கு
வந்தது -
உவகை அல்ல; அழுகை !
எள்ளும் நெல்லும்
கம்பும் சோளமும்
பருத்தியும் மல்லியும்
உளுந்தும் வரகுமாய்
மாற்றி மாற்றி
மானம் பார்த்த
விவசாயம் பார்க்கும்
புஞ்சை விவசாயி
அவன் !
- தீ.கோ.நாராயணசாமி.
தலையில ஒரு முண்டாசு
இடுப்புல ஒரு காடா வேட்டி
கையில ஒரு நாலடி நீள கோல்
வாட்ட சாட்டமான ஆறடி உயரமான
வயசு அம்பதாகவே நிலச்சு போன
இறுகிய மொகத்தோட எப்பவும் இருந்த
ஊராகாலி மாட்டுக்கார கிழவர
ஊரார் 'நன்னி' என்றே அழைத்தனர்.
தம் மக்கள் ஐவரையும்
தாய் தகப்பனற்ற
தம்பி மக்கள் மூவரையும்
மாடு மேய்த்தே கரை சேர்த்தவர்
மாண்டு போனார்
எண்பது வயதில்.
கருமாதிப் பத்திரிக்கை
படிக்கையிலதான் தெரியுது
கிழவர் பேரு 'ஆதிமூலம்'.
இட்ட பேரத் தொலைச்சு
பட்ட பேரிலேயே
வாழ்ந்து மடிஞ்சு போன
ஒரு மனுசனிடம்
எப்படிக் கேட்பது மன்னிப்பு?
-தீ.கோ.நாராயணசாமி.