புஞ்சை விவசாயி

நீல வானில்
நீந்தும் வெண்மேகங்கள்
நிறைய விண்மீன்கள்.
வானம் பார்த்தவனுக்கு
வந்தது -
உவகை அல்ல; அழுகை !
எள்ளும் நெல்லும்
கம்பும் சோளமும்
பருத்தியும் மல்லியும்
உளுந்தும் வரகுமாய்
மாற்றி மாற்றி
மானம் பார்த்த
விவசாயம் பார்க்கும்
புஞ்சை விவசாயி
அவன் !

- தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (5-Nov-20, 8:43 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : punjai vivasaayi
பார்வை : 106

மேலே