Narumithan82 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Narumithan82 |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Feb-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 3 |
உங்கள் வாசல்வரை வந்துவிட்டு
விசாரித்து போகிறவனின் அறைக்கதவை தட்டிக்கொண்டிருக்காதீர்கள்,
அவன் இருளை ஆளுமைச்செய்யத் தெரிந்தவன்
நிறைய இருக்கிறது
நிலாவும் நானும் பேசிக்கொள்ள
தனியாக
பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்து
என்னிடம்,
அவர்கள் பேசிக்கொள்வதாய் இல்லை
நிறைய இருக்கிறது
நிலாவும் நானும் பேசிக்கொள்ள
ஆம், அவர்களிடம் நானும் பேசிக்கொள்வதாய் இல்லை
நருமிதன்
யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டார்கள்,
அந்த புல்மேட்டில் உக்காந்தபடி
பறவைகளுக்கு விதைத் தூவிக்கொண்டிருந்தேன்,
நானும் இவைகளும்
அவருடைய கண்களுக்கு தெரிந்தும்
அவர் அதையே கேட்டுக்கொண்டிருந்தார்,
ஒரு சூரிய காந்தி விதையின்
உமை உடைத்தபோது
அதற்குள் இருந்த இரட்டை விதைகள்
என் கைதவறி கீழே விழுந்து உடைந்தன,
கழுத்தை ஒருபுறம் சாய்த்தவாறு
உடைந்த விதைகளை
எடுக்கவா வேண்டாமா என்றே
பார்த்துக்கொண்டு நிற்கிறேன்,
அருகிலுள்ள பைனஸ் மரப்பொந்தை
ஒரு மரங்கொத்திப் பறவை
அதை மேலும் பெரிதாக்கும் முயற்சியில்
டொக் டொக் டொக் என்று
கொத்தியவாறு
சப்தமெழுப்பிக் கொண்டிருந்துந்து,,
ஆம் நாங்கள
எதையும்
பிரித்தெடுக்க முடியாததுபோல,
காதலும், நேசமும்,
சன்னமாய் நேர்த்த நூலை
நீளவாக்கில்,
பொறுமையாய்ப் பிரித்தெடுப்பதைப்போல
இருபுறமும் பிரித்து
அவற்றை திசைத்திருப்பி விடுகிறது காலம்,
கண்ணும் கருத்துமாய்
பார்த்துக்கொண்டிருந்த உடமைகளில் ஒன்று
எத்தனை எழுப்பமாய்
மற்றொருவருடைய பிரியங்களுக்குள்ளாகி
கைவிட்டுப்போகிறது,
ஒரு தொலைதலுக்குப்பின்னால்,
எத்தனை எழுப்பத்தில்
வேறொரு உடமையின்மேல்,
கண்டதும் என் கண்களோ மனமோ
விலைப்போகிறது,
நான் கற்றுக்கொள்வதும் அங்கிருந்துதான்,
கலீல் ஜிப்ரான்
இங்ஙனம் சொல்கிறார்
""எனக்கு,
அதிக காலம் இருந்திருந்தால்
காட்டில் வாசித்த