யாராவது இருக்கீங்களா

யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டார்கள்,
அந்த புல்மேட்டில் உக்காந்தபடி
பறவைகளுக்கு விதைத் தூவிக்கொண்டிருந்தேன்,
நானும் இவைகளும்
அவருடைய கண்களுக்கு தெரிந்தும்
அவர் அதையே கேட்டுக்கொண்டிருந்தார்,
ஒரு சூரிய காந்தி விதையின்
உமை உடைத்தபோது
அதற்குள் இருந்த இரட்டை விதைகள்
என் கைதவறி கீழே விழுந்து உடைந்தன,
கழுத்தை ஒருபுறம் சாய்த்தவாறு
உடைந்த விதைகளை
எடுக்கவா வேண்டாமா என்றே
பார்த்துக்கொண்டு நிற்கிறேன்,
அருகிலுள்ள பைனஸ் மரப்பொந்தை
ஒரு மரங்கொத்திப் பறவை
அதை மேலும் பெரிதாக்கும் முயற்சியில்
டொக் டொக் டொக் என்று
கொத்தியவாறு
சப்தமெழுப்பிக் கொண்டிருந்துந்து,,
ஆம் நாங்கள் அங்கேயேதான் இருக்கிறோம்,
ஏனோ அவருக்குத்தான்
நாங்கள் புலப்படவில்லை,
யாராவது இருக்கீங்களா ன்னு
கேட்டுகிட்டே இருந்தாரு

உதயபானு

எழுதியவர் : உதயபானு (10-Feb-18, 2:23 pm)
சேர்த்தது : Narumithan82
பார்வை : 100

மேலே