அவளைத் தேடி
ஆறுதல் சொல்ல யாருமில்லை நீயில்லா வாழ்வில்.
அடிக்கடி உள்ளத்தைத் திறந்து பார்க்கிறேன் ஆழ்மனதில் நீயிருக்க.
ஆறுதல் தர அடிக்கடி வந்து போகிறாய் கனவில்.
கனவு என்பது பொய் என்று அறிந்தும் உண்மையென மகிழ்கிறேன் நீ வந்து செல்வதால்..
உயிரோட்டமில்லாமல் நீயில்லாமல்...
நினைவுகளைப் புதைத்து கலர் சாயம் பூசிச் சிரிக்கிறேன்.
சிரிப்பில் ரசனை இல்லை.
நயமில்லை.
சும்மா சிரித்து வைக்கிறேன்.
கண்ணீர்துளிகள் காரணம் சொல்லுவதில்லை.
மனபாரத்தில் அருவியாய் கொட்டுகிறது.
சொல்லத் தானே வந்தேன்.
சொல்லாமல் ஏன் சென்றாய்?
புறக்கணிக்க நான் நினைக்கவில்லை. நீதானே என்னைப் புறக்கணித்தாய்.
சந்திக்கவே நினைத்துக் கொண்டிருக்கிறேன் அனுதினமும் உன் முகத்தை.
அந்தக் கண்களை மறக்கவே முடியவில்லை.
திருடிச் சென்றுவிட்ட என்னை திருப்பித் தர வருவாயா?
அல்லது தருமனின் பாசக்கயிற்றில் முறையிடவா?
ஆறுதலாக இருந்த நீ என்னை சோகம் கரைபுரண்டோடும் ஆற்றில் ஏனடி மூழ்கடித்தாய்?
பதில் சொல்ல நீ வருவாயா?..
அல்லது காலத்தின் கோலத்தில் மறந்திருப்பாயா?
#நந்தினி.
Code Word:- SNP
என்னை அவள் கண்டுபிடிப்பதற்காக எழுதியிருக்கிறேன்.