காதலுக்கு வயதில்லை

கிழவனுக்கு வயதானாலும் - காதல்
கிறுக்குபுத்தி மாறலியே
கிழக்கே சூரியன்மறைந்தாலும் - இளமை
கிலுகிலுப்பு குறையலியே

தள்ளாடும் வயதிலும் - நீ
தலதலன்னுதான் இருக்கிறாய்
தளர்ந்துபோன தேகத்தில் - கொஞ்சம்
தடவிக்கொடு என்கிறாய்

வயதாகிப் போனபின்னும் - உனக்கு
வயகரா மருந்துகேட்கிறதோ
வம்புசெய்து எனையிழுக்க - உன்
வயதில் காதல்அம்புதாக்குகிறதோ

காதலுக்கு வயதில்லை - என்று
காது கூசுமளவிற்குஉரைக்கிறாய்
காலையிலும் இரவிலும் - தவறாது
காதல்கோட்டையில் சிறைபிடிக்கிறாய்

நிழலாக இல்லாமல் - என்
நிஜமாக திகழ்கிறாய்
நிழற்படம் எடுக்கச்சொல்லி - இரவில்
நிலவென்று என்னைப்புகழ்கிறாய் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (10-Feb-18, 2:34 pm)
பார்வை : 805

மேலே