நேதாஜிதாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நேதாஜிதாசன்
இடம்:  Tirunelveli
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Dec-2015
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  14

என் படைப்புகள்
நேதாஜிதாசன் செய்திகள்
நேதாஜிதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2016 1:10 pm

செக்குமாடுகள் போல வாழ்க்கை
சைரன் இசையின் அரண்மனை
சங்கமெனும் ஆயுதம்
கண்ணிலே ரோஸா லக்ஸம்பர்க்கின் கனவுகள்
போராடி போராடி அலுத்துப்போன நெஞ்சம்
ஆம்
நாங்கள் தான் தொழிலாளிகள்
உங்கள் மானம் காக்கும் உடை நெய்தது நாங்களே
உங்கள் உடைமை காக்கும் வீடு கட்டியது நாங்களே
உங்கள் உடலை காக்கும் உணவை விளைவிப்பது நாங்களே
நீங்கள் முதலாளியாக இருங்கள்
எங்களை தொழிலாளியாக வாழவிடுங்கள்
போராட்டம் எங்கள் காலை உணவு
வேலை நிறுத்தம் எங்கள் மதிய உணவு
வெற்றி எங்கள் இரவு உணவு
ஆம்
நாங்கள் தான் தொழிலாளிகள்
இதோ எங்கள் உழைப்பை பிச்சைப்போடுகிறோம்
பொறுக்கிக்கொள்ளுங்கள்

மேலும்

நேதாஜிதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2016 1:24 am

உடல் மறைக்க ஆடை போய்
உடல் காட்ட ஆடையானது தான்
நூற்றாண்டு சாதனையோ
துகில் உரித்ததற்கு போர் முழங்கி
கூட்டம் கரைத்த பாரதத்தில்
உரிந்த துகில் உடுத்துவது தான்
நூற்றாண்டு சாதனையோ
கற்பழிப்பு குற்றச்சாட்டு நாள்தோறும் நாளேடுகளில்
காட்சிக்கு குற்றம் ஆனால் மிருகமாவது இயல்பு தான்
இது காட்சியில் குற்றமா மிருகத்தின் குற்றமா
இது தான் நூற்றாண்டு சாதனையோ
ரெளத்திரம் பழகு போய் கவர்ச்சி பழகு என்பது தான் நூற்றாண்டு சாதனையோ
ஆடையில் பிழை பிறகு எப்படி பெண் ஒழுக்கம் வாழும்
உடையில் கவர்ச்சி பாரத பண்பாடு ஆகாது
நடத்தையில் கவர்தல் பாரத பண்பாடு ஆகும்
உடல் மறைய உடையணிவீர்
உலகம் மறையா புகழடைவீர்

மேலும்

நேதாஜிதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2016 1:19 am

பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போனேன் வார்த்தை சமையல் செய்து கொண்டு
யாரோ பாகற்காயை அதிகமாக சேர்த்துவிட்டார்கள் போல
அன்று அவர் இறந்துவிட்டார்
வாழ்த்து இரங்கலாக பால் தயிராக மாறுவது போல உடனடியாக மாறியிருந்தது சற்று அறுபது வருட கால இடைவெளியில்

மேலும்

நேதாஜிதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2016 1:18 am

நிழல் இல்லாத தரைகளும்
கவனிப்பாரற்ற அஞ்சல்களும்
சிலந்திகளின் இடையூறற்ற வலைப்பின்னலும்
நிசப்தத்தின் நிசப்தமான வேளைகளும்
செயற்கை வெளிச்சம் இல்லாத இருள்களும்
என் வெளியேற்றத்தால் தான்
மகிழ்வுடன் நிகழும் எனில் இதோ சென்றுவிடுகிறேன் வீட்டை காலிசெய்து

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே