வாடகைவீடு

நிழல் இல்லாத தரைகளும்
கவனிப்பாரற்ற அஞ்சல்களும்
சிலந்திகளின் இடையூறற்ற வலைப்பின்னலும்
நிசப்தத்தின் நிசப்தமான வேளைகளும்
செயற்கை வெளிச்சம் இல்லாத இருள்களும்
என் வெளியேற்றத்தால் தான்
மகிழ்வுடன் நிகழும் எனில் இதோ சென்றுவிடுகிறேன் வீட்டை காலிசெய்து

எழுதியவர் : (22-Mar-16, 1:18 am)
சேர்த்தது : நேதாஜிதாசன்
பார்வை : 72

மேலே