இலவச ஆறுதல்
இந்த நகரத்தை அழவைக்க வேண்டும்
வானம் நகரத்தின் பரிதாபம் கண்டு
அழுதது அப்போதும் அழவில்லை இந்த நகரம்
மனிதர்கள் பிறரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த போதும் அழவில்லை இந்த நகரம்
மனிதர்கள் புதையுண்ட போதும் அழவில்லை இந்த நகரம்
மனிதர்கள் எரியுண்ட போதும் அழவில்லை இந்த நகரம்
பெட்ரோல் புகை கண்ணை கலங்கவைத்த போதும் அழவில்லை இந்த நகரம்
பெண்கள் கற்பு அனுபவிக்கப்பட்ட போதும் அழவில்லை இந்த நகரம்
நான் எழுதிக்கொண்டிருக்கும் போதும் அழவில்லை இந்த நகரம்
இந்த நகரம் சிரித்து கொண்டதிற்கு சாட்சியம் இல்லை நம்மிடம்
ஒரு தடவை அழு,அழுதால் என் ஆறுதல் இலவசம்