தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 12 -= 44

“மண மேடையில் பூந் தோராணம்
மனம் வீசிடும் நீயென் வாழ்க்கை சீதனம் !”

“இரு மாலைகள் பறி மாறிடும்
இதய ஜீவன்கள் பூக்கள் தூவிடும் !”

குடும்ப விளக்கு நீ எனக்கு
என் குலம் காப்பதில் சிறந்து விளங்கு

குடும்ப விளக்கு நான் உனக்கு
உன் குண படியே ஒளிரும் விளக்கு

நாட்டு நடப்பு தெரிந்து பழகு
நன்மையும் தீமையும் ஒன்றென கருது

வீட்டுப் பொறுப்பு என்னிடம் இருக்கு - இனி
தொட்டதெல்லாம் பொன்னாகும் உனக்கு


மழை காலத்தின் குளிர் மேகம் போல்
நீ எப்பொழுதும் என்னில் வீசு..!

விரக கோட்டையின் வாயிற் காவலன் நான்
வினை வந்தால் கொட்டுவேன் போர் முரசு..!

குறும்பாடு நீ செய்யும் குறும்புகள்
அரும் பொன்றுக்கான அரும்பாடு

திரு மேனியை வருடும் போதெல்லாம்
நாடி நரம்புகள் இரும்பாகுமே !

எழுதியவர் : சாய்மாறன் (21-Mar-16, 10:14 pm)
பார்வை : 102

மேலே