உழைப்பாளி
செக்குமாடுகள் போல வாழ்க்கை
சைரன் இசையின் அரண்மனை
சங்கமெனும் ஆயுதம்
கண்ணிலே ரோஸா லக்ஸம்பர்க்கின் கனவுகள்
போராடி போராடி அலுத்துப்போன நெஞ்சம்
ஆம்
நாங்கள் தான் தொழிலாளிகள்
உங்கள் மானம் காக்கும் உடை நெய்தது நாங்களே
உங்கள் உடைமை காக்கும் வீடு கட்டியது நாங்களே
உங்கள் உடலை காக்கும் உணவை விளைவிப்பது நாங்களே
நீங்கள் முதலாளியாக இருங்கள்
எங்களை தொழிலாளியாக வாழவிடுங்கள்
போராட்டம் எங்கள் காலை உணவு
வேலை நிறுத்தம் எங்கள் மதிய உணவு
வெற்றி எங்கள் இரவு உணவு
ஆம்
நாங்கள் தான் தொழிலாளிகள்
இதோ எங்கள் உழைப்பை பிச்சைப்போடுகிறோம்
பொறுக்கிக்கொள்ளுங்கள்