நம் முகப் புத்தகம்
உன் முக புத்தகத்தில்
இப்போதெல்லாம் நான்
வெறும் பொம்மைகளாகியிருக்கிறேன்...
நம் பழைய புகைப்படங்கள்
யாருக்கு சாட்சி சொல்கின்றன..
உனக்கா.. எனக்கா.. நம் காதலுக்கா...
கள்ள சிரிப்பை ஏதோ ஒரு
ஸ்டேட்டசில் போட்டிருந்த
பழைய ஸ்க்ராலிங்கில் எனது
திருட்டுத்தன தேடலை
உன் அக நூல் இந்நேரம்
கண்டு பிடித்திருக்கும்...
நமது மறைமுக
உரையாடல்களை இன்று
படிக்கையில் நம் உறவை
ஊருக்கே சொல்லியிருக்கிறோம்-
இப்போது ஆச்சரிய எமோஜியாய்
என் முகம்...
சட்டென நின்றுவிட்ட நம்
உலகத்தில் மீண்டும் மீண்டும்
திசை தெரியாமல் அலைமோதும்
முகப் புத்தகம் இறுகிக் கிடக்கிறது..
மார்க்கின் தோல்வியைப் போல...
நீ கடைசியாக பதிந்த புத்தர்
கூட என்னிடம் முகம்
திறக்க மறுக்கிறார்...
பகிர முடியா அழுத்தத்தில்
நீ ஊஞ்சல் ஆடும் ஓவியக்
கூட்டை
லைக்கால் கூட கலைத்து விட
மாட்டேன்....நம்பு...
நம் புத்தகத்துக்கு முகமும்
வேண்டுமா...என்ன.....!?
கவிஜி