பாரத பண்பாடு
உடல் மறைக்க ஆடை போய்
உடல் காட்ட ஆடையானது தான்
நூற்றாண்டு சாதனையோ
துகில் உரித்ததற்கு போர் முழங்கி
கூட்டம் கரைத்த பாரதத்தில்
உரிந்த துகில் உடுத்துவது தான்
நூற்றாண்டு சாதனையோ
கற்பழிப்பு குற்றச்சாட்டு நாள்தோறும் நாளேடுகளில்
காட்சிக்கு குற்றம் ஆனால் மிருகமாவது இயல்பு தான்
இது காட்சியில் குற்றமா மிருகத்தின் குற்றமா
இது தான் நூற்றாண்டு சாதனையோ
ரெளத்திரம் பழகு போய் கவர்ச்சி பழகு என்பது தான் நூற்றாண்டு சாதனையோ
ஆடையில் பிழை பிறகு எப்படி பெண் ஒழுக்கம் வாழும்
உடையில் கவர்ச்சி பாரத பண்பாடு ஆகாது
நடத்தையில் கவர்தல் பாரத பண்பாடு ஆகும்
உடல் மறைய உடையணிவீர்
உலகம் மறையா புகழடைவீர்