Paapu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Paapu
இடம்
பிறந்த தேதி :  12-Jul-1997
பாலினம்
சேர்ந்த நாள்:  20-May-2016
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  10

என் படைப்புகள்
Paapu செய்திகள்
Paapu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2016 9:16 pm

ஒருவரைப் பிரியப்போகிறோம்
என்று நினைக்கும் போது
வரும்
கண்ணீரை விட....
ஒருவரைப் பிரியக்கூடாது
என்று நினைக்கும் போது
வரும்
கண்ணீருக்கே வலி அதிகம்....!

மேலும்

உணர்ந்தவர்கள் மண்ணில் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-May-2016 8:42 am
Paapu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2016 9:10 pm

இரவில் ரம்மியமாய்
ஒளிரூட்டும் நிலா !

துயிலெழுப்பும் அலாரமாய்
சேவலின் கூவல் !

பகலில் பிரகாசமாய்
பரவசமூட்டும் பகலவன் !

அழையா விருந்தினராய்
மலர்ந்திருக்கும் பூக்கள் !

இனிய கீதமாய்
பறவைகளின் கூச்சல் !

குளிர்ச்சியூட்டும் விசிறியாய்
குளிரவைக்கும் கார்முகில் !

வானின் முத்துக்களாய்
மண்ணில் விழும் மழைத்துளி !

ஒளிர்ந்த வண்ணமாய்
வர்ணஜாலம் காட்டும் வானவில் !

கடலின் குதூகலமாய்
ஆர்ப்பரிக்கும் அலைகள் !

சில்லென்ற தென்றலாய்
தவழவைக்கும் காற்று !

பச்சை கம்பளமாய்
படர்ந்திருக்கும் வயல்வெளி !

இறைவனின் தோட்டமாய்
அழகூட்டும் காடுகள் !

வியப்பின் உச்சமாய்
பிர

மேலும்

எல்லாவற்றையும் உணர்ந்தால் நலமே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-May-2016 8:45 am
Paapu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2016 9:09 pm

புத்தம்புது வாழ்க்கையின்
இனியதோர் துவக்கம் !

மகிழ்ச்சியின் வாசல்படி – இது
சொர்கத்தின் முதல்படி !

நம்பிக்கையைத் தூண்டும்
நண்பர்களின் வருகை...

இனிய அனுபவங்களுக்கு
சொந்தமான இடம் – இது
இனிமையைக் கொடுக்கும் இடம் !

நேசத்தால் ஆனந்த கண்ணீர் கடலில்
அனைவரையும் மூழ்கடிக்கும்
ஓர் உன்னத இடம் !

பிரிந்த பின்பும்
பல இனிய நினைவுகளை
சுமந்து கொண்டிருக்கும்
ஓர் தாய் மடி…!!!

மேலும்

Paapu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2016 9:07 pm

’அன்பு’ என்னும் வார்த்தையை
அறிந்து கொண்டேன்
அன்னையிடம் !

’அரவணைப்பு’ என்னும் வார்த்தையை
கற்றுக் கொண்டேன்
தந்தையிடம் !

’கல்வி’ என்னும் வார்த்தையை
ஆவலுடன் அறிந்தேன்
ஆசிரியரிடம் !

’நேசம்’ என்னும் வார்த்தையை
நேரில் கண்டேன்
நேசமான உறவுகளிடம் !

’சந்தோஷம்’ என்னும் வார்த்தையை
சந்திக்க நேர்ந்தேன்
சகோதரியிடம் !

’பாசம்’ என்னும் வார்த்தையை
அருகில் கண்டேன்
அண்ணணிடம் !

ஆனால்.....

இவ்வனைத்து வார்த்தைகளையும்
தெரிந்து கொண்டேன்
”நட்பு” என்னும் அகராதியில்.....!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே