நட்பு

’அன்பு’ என்னும் வார்த்தையை
அறிந்து கொண்டேன்
அன்னையிடம் !

’அரவணைப்பு’ என்னும் வார்த்தையை
கற்றுக் கொண்டேன்
தந்தையிடம் !

’கல்வி’ என்னும் வார்த்தையை
ஆவலுடன் அறிந்தேன்
ஆசிரியரிடம் !

’நேசம்’ என்னும் வார்த்தையை
நேரில் கண்டேன்
நேசமான உறவுகளிடம் !

’சந்தோஷம்’ என்னும் வார்த்தையை
சந்திக்க நேர்ந்தேன்
சகோதரியிடம் !

’பாசம்’ என்னும் வார்த்தையை
அருகில் கண்டேன்
அண்ணணிடம் !

ஆனால்.....

இவ்வனைத்து வார்த்தைகளையும்
தெரிந்து கொண்டேன்
”நட்பு” என்னும் அகராதியில்.....!!!

எழுதியவர் : Paapu (21-May-16, 9:07 pm)
சேர்த்தது : Paapu
Tanglish : natpu
பார்வை : 477

மேலே