Ramakrishnan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ramakrishnan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Sep-2020
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  8

என் படைப்புகள்
Ramakrishnan செய்திகள்
Ramakrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 10:01 am

தந்தையின் விந்தணுவால், தாயின் கருவறையில் விந்தையெனும் விதையாக விதைக்கப்படுமுறவு;

தொப்புள் கொடி வழி தாயின் உணவும் உணர்வும் கொண்டு
பத்து மாதங்கள் பக்குவமாய் வளர்ந்து
பூவுலகில் பூக்குமுறவு;

போற்றுதலுக்கும் வணக்கத்திற்குமுரிய தாய் தந்தை உறவு;

உறவு சடங்குகளில், முத்தாய்ப்பாய் முதலில் போற்றப்படும் தாய்மாமனுறவு;

அத்தைமடி மெத்தையடியென குட்டிக்குழந்தை கொஞ்சி மகிழுமுறவு;

பெருந்தாய் தகப்பனாய்ப் போற்றப்படும்
பாசமான பெரியம்மா பெரியப்பனுறவு;

செல்லம் கொஞ்சும் அழகான சிற்றன்னை சிற்றப்பனுறவு;

பெற்ற பிள்ளைகளின் பிள்ளைகளைப்
பார்த்து பல கோடி ஆனந்தம் காணும் பாட்டன் பாட்டி உறவு;

இரத்தப்பா

மேலும்

Ramakrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 9:57 am

கவிதை:

விளிம்பு நிலை மனிதர்களின்
வாழ்வில் விளக்கேற்ற,
🌸இனியொரு விதி செய்வோம்;

விவசாயம் தழைத்திட, உழவனின்
வாழ்க்கை உயர்ந்திட,
🌸இனியொரு விதி செய்வோம்;

நாளும் பசியால் வாடும் வறியவர்களின்
வயிற்றை நிரப்பிட,
🌸இனியொரு விதி செய்வோம்;

நாடெல்லாம் நலிந்து போன
நாட்டுப்புறக்கலைகளை மீட்டெக்க,
🌸இனியொரு விதி செய்வோம்;

மாற்றுத்திறன் கொண்ட மனிதர்களின்
வாழ்வை மெருகேற்ற,
🌸இனியொரு விதி செய்வோம்;

பெண் குழந்தைகளிடம் வன்கொடுமை புரியும் வஞ்சகர்களை "போக்சோ" என்னும் தீயில் பொசுக்க,
🌸இனியொரு விதி செய்வோம்;

மகளிர்தம் வாழ்வில் மேன்மேலும் மாற்றங்கள் ஏற்பட,
🌸இனியொரு விதி செய்வோம்;

நற்கல்வ

மேலும்

Ramakrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 9:55 am

எங்களைப் பார்த்து ஓரறிவு என்கிறாயே மனிதா!
அதுவும் ஒய்யாரமாய் நாங்கள் தந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு...
இதயத்தில் ஈரமில்லாமல் ஆறறிவு எதற்கு கொண்டாய்?
இரக்கமே இல்லாமல் எங்களை கொல்லவா?

நீ பிறந்தவுடன், தவழ்கிறாய் நாங்கள் தரும் தொட்டிலில்,
உண்ண, உனக்கு எந்தம் காய்களும் கனிகளும்,
உடுத்த நாங்கள் தரும் உன்னத உடைகள்;
உன் வீட்டுக்கு அரணாக-கதவாக நாங்கள்;

நீ படிக்க உனக்கு எந்தம் மேசையும் புத்தகமும்,
உல்லாசமாய் உறங்க உனக்கு எந்தம் கட்டில்;
வனப்பாய் நீ வாழ உனக்கு எந்தம் வாசனை திரவியங்கள்;
இனிதாய் இளைப்பாற எந்தம் நிழல்;
விளையாடுவதற்கு நாங்கள் தரும் மட்டை;
இசைப்பதற்கு நாங்கள் தரும் கருவி;

மேலும்

Ramakrishnan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2020 9:53 am

மாசில்லா மன மதனில்
மாறா வாய்மையைக் கொள்;
நேசமிகு நெஞ்ச மதனில்
அளப்பரிய அன்பைக் கொள்;

உதிர்க்கும் சொற்களில் என்றும்
தேனினும் இனிமை கொள்;
செய்யும் செயல்களில் என்றும்
உலகின் நன்மையைக் கொள்;

கூசாமல் பொயுரைக்கும் கூட்டம் தன்னை ஒதுக்கித் தள்;
பேசாமல் உழைக்கும் மனிதர்களின்
மான்பையே மனதில் கொள்;

நித்த முதிக்கும் பகலவனின்
பேராற்றலை உன்னில் கொள்;
ஓயாத கடலலைகள் போல்
உன்னில்
உழைப்பைக் கொள்;

சமயம் பாராமல் நீ உழைத்தால் இமயமேறும் உனதுதாள்
வாழ்வில் வாகை சூடுவாய்
இனி ஒவ்வொரு நாள்;

வஞ்சகர் கூட்டத்திற்கு என்றுமே
நீ கூரிய வாள்
பேரிடியாய் இடுக்கண் வரினும் பாதை மாறா உனதுதாள்;

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே