கவிதை எழுதுவது
என் அன்பான தோழர்களே என் இனிமையான
நண்பர்கள் கவிதை என்பது ஒரு மொழி
கவிதை என்றால் அது தான் வாழ்க்கை இந்த
உலகம் எல்லாம் எப்படி கவிதை எழுதி
பழகி கொண்டு இருக்கிறது உன் மனதில்
ஓடும் வார்த்தைகள் எல்லாம் இங்கு
நீ கொட்டி தீர்த்து கொள் பின்பு கவிதை
எழுதுவது உன் வாழ்க்கையில் ரொம்ப ஈஸி
கஷ்டம் இல்லை கவிதை என்பது இலக்கணம்
இலக்கியம் போன்ற வடிவில் அமைந்தது
அதை எழுத கற்றுக்கொள்ள தேவை எதுகை
மோனை, இடை, திரைப்படத்தில் பாட்டு
எழுத தேவை மெட்டு, வரி, காமம் இவையெல்லாம் தான் உங்களை கவிதை
எழுத வைக்கும்
30-Dec-2021 7:10 pm
நெசவு
அதிகாலை கடப்பாரை அடிக்கும் சப்தத்தில் கதிரவனை எழுப்பும் நெசவாளர்கள் நாங்கள் //
போராட்டக்களமோ நாங்கள் பின்னிய நூல்கள் //
பொங்கி உண்ணவே போதவில்லை அன்னங்கள்//
பாரதப் பருத்தி அழிந்ததின் விளைவு
அயல்நாட்டு பருத்தியால் அருண்டது நெசவு //
அரசாங்கத் திட்டங்கள் திண்டாட்டமாக மாற
நெசவாளியோ தினக்கூலியாக இடம்பெயர்ந்து போக
ஆதிகுடி கண்ட அற்புத தொழிலென்று
பெருமை அம்மணமாய் நிற்கிறது இன்று
தீயினால் அன்னிய ஆடையை ஒழித்து தன் மேனியால் காதியை போற்றிய காந்தி
மீண்டும் பிறந்தால் பிறக்குமோ
பாரத கொடியாய் எங்களின் நெசவு
சஹாரா கவிஞன் ச.அபுதாஹிர் நூரானி திருப்பூர் 22-Nov-2021 10:57 am