SURYA - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : SURYA |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-May-2019 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 3 |
கருவாட்டு பய என்ன
கயலாடும் நெலமாக்க
கரங்கோத்து நீ வந்தா
நரம்பாடும் நேரங்கூட
நெடுந்தூரம் போகுமடி
ஏலேய் எசமானா!
கடிகார உருக்காரா!
கண்ணாடித்தெறக் குள்ள
சுத்தி வரும் முள்ளு ராசா
கள்ளுந் தணிச்சிராத சோகத்த காட்டத்தான்
மூணு வருசமெங்கும் மும்முரமா போனியோ?
இனி
வரப்போற ஒரு வாழ்வ
பெறப்போற நான் சொல்ல
பஞ்சாங்கம் எதுக்கய்யா
பட்டறிவு இருக்கையில
சித்தெறும்பு கூட்டம் போல்
புத்தடஞ்சு போயிருந்து
பேசிச் சிரிச்சதெல்லாம்
பெறவெண்ணிப் பாக்கையிலே
காசு பணம் வேணான்னு
காத்துல விட்டெறிஞ்சு
வகுப்பறை வாசலுக்கு
வெரசா வரத்தோனும்
குட்டிக்கரணம் போட்டாலும்
கோடி ருவா கொடுத்தாலும்
வெட்டி போட்ட செலந்தி வல
ஒட்டு போட்டு சேராது
எட்டிப் போன இந்த சொந்தம்
தட்டிப் பாத்தும் வாராது
காதல் காய்ச்சல் வ
கண்ணில் தெரிவது பெண்ணா - இல்லை
பாலில் செய்திட்ட பொன்னா
கருமை சொல்வது கண்ணா - அது
கார்முகில் வானின் பண்ணா
பேரெழில் கண்ணோடு எந்தன் முன்னே
இப்பாவலன் கண்டிட செல்லும் பெண்ணே
மாதுவின் பார்வை பட்டால் கூட
மதுவென்றெண்ணி மயங்குகின்றேனே
நடந்து செல்வது ஓர் நங்கை என்று
இறுதிவரை நான் நம்பவில்லை
பறந்து செல்லும் வான் மங்கை என்று
பதித்துவிட்டேன் அதில் மாற்றமில்லை
வைரத் துகள்கள் தேர்ந்தெடுத்து
மஞ்சள் நிலவும் சேர்த்தெடுத்து
நாணம் ஊற்றி குலைத்தெடுத்து
மங்கை என்றே பிறந்தவளே
மஞ்சள் பூத்த நிறத்தாலே
என் மஞ்சம் வரை வென்றவளே
திங்கள் தூங்கும் இருவிழியால்
பல இம்சை மூட்டிச் சென்றவளே
வன்கா