சாந்தீஸ்வரி ராஜாங்கம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சாந்தீஸ்வரி ராஜாங்கம் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 18-Jan-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-May-2022 |
பார்த்தவர்கள் | : 184 |
புள்ளி | : 12 |
பள்ளிக்கூட நாட்கள்
பள்ளிக்கூட நினைவுகள்
பாடம் கற்ற தருணங்கள்
பரவசம் தரும் உணர்வுகள்
வார்த்தையில் அடங்காத வரிகளாக
வர்ணிக்க முடியாத வார்த்தைகளாக
வசந்த கால நிகழ்வுகளாக
என்றும் நம் உள்ளத்தில்
நீங்காத நினைவலைகளாக.....
சூரியனின் வெப்பம் மறந்து
சுடு மண்ணில் சுகம் கண்டோம்...
பகலவனின் பரிகாசத்தில்
பட்டாம்பூச்சியாய் பறந்திருந்தோம்...
பல வீட்டு சமபந்தி விருந்தில்
பகிர்ந்து உண்ணும் கலை அறிந்தோம்....
ஆலமரத்தின் விழுதுகள் ஏறி
ஆகாயம் தொட முயற்சி செய்தோம்...
ஒற்றை கீத்து மாங்காயில் ஒற்றுமையை உணர்த்திட்டோம்...
உயர்வு தாழ்வு நிலையற்று
உன்னதமாய் உறவு கொண்டோம்....
வகுப்பறையில
https://youtu.be/wCgjWgRENOY
கண்ணதாசனுக்கு சமர்ப்பணம்
கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
என்று ஆரம்பித்த கலைப்பயணம்....
கண் மூடும் வேளையிலும்
கலை ஒன்றே உயிராக
உள்ளத்தில் நல்ல உள்ளமாக
உலகம் பிறந்தது எனக்காக என்று தொடங்கினேன்......
காதலிக்க நேரமில்லை என்றவனை
கல்லிலே கலை வண்ணம் காண வைத்து
கண்களின் வார்த்தைகளை அறிய வைத்து
காதல் சிறகை காற்றினில் விரித்தாய்....
நீரோடும் வைகையில்
நான் மலரோடு தனியாக நிற்கும் வேளையில்
நிலவென்னும் ஆடை கொண்டவள்
நடையா இது நடையா என நடை போட்டு
நெஞ்சத்திலே நீ என்னுள் வந்தாய்.....
என்னருகே நீ இருக்கும் பொழுதில்
மௌனமே பார்வையாக
மயக்கமா கலக்கமா என தெரியாமல்
அவள் அப்படித்தான்
விடியும் முன் எழுவாள்
விடியலாய் ஒளிர்வாள்
விதியோடு விளையாடி
விதிவிலக்காக வாழ்வாள்
வீரத்தோடு போராடி
தாரகையாக மிளிர்வாள்
சரித்திரத்தின் பக்கங்களில்
சாதனை படைக்கும் சக்தி அவள்....
அவள் அப்படித்தான்...
கடமையே கண்களாக
தடைகளை தகர்ப்பவளாக
உடலில் மென்மையாக
உள்ளத்தில் உறுதியாக
உழைப்பினில் உண்மையாக
உயர்வினில் உறுதுணையாக உலகை வெல்லும் துணிவானவள் அவள்....
அவள் அப்படித்தான்...
ஆறுதலில் தாயாக
அரவணைப்பில் சேயாக
அர்ப்பணிப்பில் மனைவியாக
அனுசரிப்பில் மருமகளாக
பொறுமையின் சிகரமாக
போராடுவதில் போராளியாக
தியாகத்தின் தலைமகள் அவள்....
அவள் அப்படித்தான்....
அவ