SaraImtiyas - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : SaraImtiyas |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Jul-2020 |
பார்த்தவர்கள் | : 27 |
புள்ளி | : 2 |
எண்ணற்ற காகிதக் கிறுக்கல்கள்...
எண்ணங்களின் கோர்வையாய்;
காகிதம் மேல் கண்ணியமாய் பதிக்கப்பட்ட கவிதைக்கிறுக்கல்கள்!
அது ஒருவகைக் கிறுக்குத்தனம்!
ஒருவகைத் தியானம்!
மனதின் ஓரமாய் மறைந்திருக்கும் மர்மப்புதிர்கள்,
கேட்டுவிட நினைத்தும் கேட்டிராமல் குவிந்துகிடக்கும் வினாக்கள்,
சொல்லிட நினைத்தும் சொல்லிராமல் மௌனித்துப் புதைந்திருக்கும் பதில்கள்,
கனவுகள் துரத்தியே களைத்துப்போன கதைகள்,
ஏமாற்றமாகிப் போன எதிர்பார்ப்புக்கள்,
நடுவில் நிலைத்திராமல் நகர்ந்துபோன நிம்மதிமிக்க சிலநாட்கள்,
என்றோ ஓர்நாள் நனவாகிடுமென்ற நாட்டத்தில்
சின்னச்சின்ன ஆசைகள்கோர்த்தே மனதில்கட்டிய கற்பனைக்கோட்டைகள்
என்றே
பலவ
நில்லாமல் நகர்ந்திடும் நிமிடங்களையும்;
வெகுவிரைவாய் உருண்டோடிடும் நாட்களையும்;
துரத்தியவளாய் நடைபோடுகிறேன் வாழ்க்கைப்பாதையில்.....
நினைத்தவைகள் நிகழவில்லை....
பிடித்தவைகள் கிடைக்கவில்லை...
கிடைத்தவற்றை பிடித்ததாய் மாற்றிக் கொள்ள முயன்றும் முடியவில்லை...
கடமைக்காய் வாழ்கிறேன்....
வாழ்கிறேன் என்று உள்ளத்தால் உணரப்படாமல்,
வாழ்க்கையினைப் புரிந்திராமல்..
வாயளவில் வார்த்தைகளற்ற மௌனியாய்;
மனதளவில் எண்ணங்கள் மிகு வாயாடியாய்!
புன்னகையில் பல இன்னல்கள் மறைத்தே, புதிர்களை பதுக்கியே பதுமையாய் வாழ்கிறேன் நானும்!
என்றோ ஓர் நாள் மாற்றங்கள்
மனதை மகிழ்ந்து நிறைய வைக்கும் என்ற மூடநம்பிக்கையை சுமந்த