வாழ்கிறேன்

நில்லாமல் நகர்ந்திடும் நிமிடங்களையும்;
வெகுவிரைவாய் உருண்டோடிடும் நாட்களையும்;
துரத்தியவளாய் நடைபோடுகிறேன் வாழ்க்கைப்பாதையில்.....
நினைத்தவைகள் நிகழவில்லை....
பிடித்தவைகள் கிடைக்கவில்லை...
கிடைத்தவற்றை பிடித்ததாய் மாற்றிக் கொள்ள முயன்றும் முடியவில்லை...
கடமைக்காய் வாழ்கிறேன்....
வாழ்கிறேன் என்று உள்ளத்தால் உணரப்படாமல்,
வாழ்க்கையினைப் புரிந்திராமல்..
வாயளவில் வார்த்தைகளற்ற மௌனியாய்;
மனதளவில் எண்ணங்கள் மிகு வாயாடியாய்!
புன்னகையில் பல இன்னல்கள் மறைத்தே, புதிர்களை பதுக்கியே பதுமையாய் வாழ்கிறேன் நானும்!
என்றோ ஓர் நாள் மாற்றங்கள்
மனதை மகிழ்ந்து நிறைய வைக்கும் என்ற மூடநம்பிக்கையை சுமந்தவளாய்....
Sara Imtiyas
Faculty of AlliedHealthSciences
UniversityOfPeradeniya

எழுதியவர் : Sara Imtiyas (8-Jul-20, 2:26 pm)
சேர்த்தது : SaraImtiyas
பார்வை : 346

மேலே