நினைத்தாலே இனிக்கிறது கட்டுரை

புகைவண்டியில் நீண்டதொரு பயணம்
வளைந்து நெளிந்து மிக நளினனத்துடன்
புகைவண்டி செல்வதை
சாளரம் வழியே
எட்டிப் பார்க்கும் போது என்னே /அழகு
அட்டை ஓன்று நகர்ந்து செல்கின்றது போல்
மனம் முழுக்க மகிழ்ச்சி மழலை என நாம்,
ஒரு பகல் முடிந்து ஆகா இரவு வந்து விட்டது
ஆனந்தமாக அயர்ந்த தூக்கம் கண்களில்
மங்கிய வெளிச்சங்கள் எங்கேயும்
மனம் முழுக்க அமைதி

இடைஇடையே புகைவண்டி நிறுத்தும் இடங்களில்
சிறிது விழிப்பதும் பின் அயர்வதும் இப்படியாக
எங்கள் பொழுது புலர்ந்தது
ஆகா இன்னும் ஒரு பகல் புகையிரதத்தில் பயணம்
சென்னையில் இருந்து டெல்லி நோக்கி எங்கள் பயணம் உற்சாகம்
சாயங்காலம் வந்தது அளவற்ற மகிழ்ச்சி
நாங்கள் சுற்றி பார்க்க வந்தோம் சுதந்திரமாக
ஆண்டவன் அருளால் நினைத்த இடங்கள் யாவும்
சென்றோம்
மனமோ நிறைவு, ஆனந்தமோ சொல்லில் அடங்கா
அன்று நாங்கள் பார்த்து ரசித்தவை இன்றும்
நினைவில் இனிக்கிறது
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் இது பழமொழி
இன்றும்அந்த இனிய நினைவுகள் தித்திக்கின்றது

எழுதியவர் : பாத்திமாமலர் (8-Jul-20, 11:56 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 109

மேலே