புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 20---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௦

191. கண்டிக்கப்படாமல் வளர்பவர் நிச்சயம் ஒரு நாள் தண்டிக்கப்படுவார்.

192. தீர்ப்புகள் திருத்தப்படலாம் ஆனால்
நீதி எப்போதும் ஒன்று தான்.

193. முகத்துக்கு முன்னால் கைது செய்யப்பட்டாலும்
முதுகுக்குப் பின்னால் கௌரவம் செய்யப்படுகிறது.

194. சுவரிலோ?... உறவிலோ?...
சிறு விரிசல் ஏற்படும் போதே கவனத்துடன் சரிசெய்துகொள்
இல்லை என்றால் பெரும் பிளவு ஏற்பட்டு இரண்டாக உடைந்துவிடும்.

195. விதிகளுக்கு உட்பட்டு நடப்பவர்களை விட
விதிவிலக்குகளே இங்கு அதிகம்.

196. உன்னால் துன்பத்தை அனுபவித்த ஒருவர்
உன்மேல் காட்டும் கோபத்தை விட
சிரிப்பு அதிக விளைவை ஏற்படுத்தும்.

197. நீ நியமிக்கும் நல்லவர் ஒருவரால்
உன் கெட்டது வெளிவரும் போது
அவர் மீது இயல்பாகவே வெறுப்புத் தோன்றிவிடும்.

198. கருவில் இருக்கும் போது காலால் எட்டி உதைத்தாய்
பிறந்து வளர்ந்தப் பிறகு வார்த்தையால் எட்டி உதைக்கிறாய்.

199. வேருக்கும் மலருக்கும் தூரம் இருந்தாலும் ஒரு தொடர்பு இருப்பதைப் போல
நெருங்கிய உறவுகள் பிரிந்து இருக்கையிலும் ஒரு தொடர்பு இருக்கிறது.

200. நல்லவர் கெட்டவர் இவர்களை விட
இங்கு நல்லவர் போல் நடிப்பவர்களே அதிகம்.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (8-Jul-20, 10:22 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 66

மேலே