க்ஷ ஷ ஸ ஜ ஹ ஸ்ரீ எல்லாம் வேண்டாமா
க்ஷ ஷ ஸ ஜ ஹ ஸ்ரீ எல்லாம் வேண்டாமா ?
சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வன்னம் செயல்.
பாரதத்தில் ஒரு அங்கமானத் தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் பாரதத்தின் தமிழ்நாடு
என்று சொல்லிக் கொள்ள மறுக்கிறார்கள். சுதந்திரம் பெற்றவுடன் தமிழ்நாட்டு பாரதம்
என்ற சொல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மறைந்து காணாமலே போய்விட்டது.
இந்தியா என்ற ஆங்கிலச் சொல் பிடித்திருக்கிறது. பாரதம் என்பது வடமொழி என்கிறான்.
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் வடமொழி சொற்களான க்ஷ ஷ ஸ
ஜ ஹ போன்ற எழுத்துக்கள் தவிர்க்க முடியாத எழுத்துக்களாக இருந்தது.. குழந்தை
களுக்கானத் தமிழ் அரிச்சுவடியில் இந்த எழுத்துக்களை முதல் பக்கத்திலேயே குறிப்
பிட்டிருப் பார்கள். இந்த எழுத்துக்கள் மனிதர்களின் பெயரில் தவிர்க்க முடியாத எழுக்களாகி
இருந்தது. உதாரணமாக ஜானகி ஜானகிராமன் ஜனம் ஜனனம் ஜன்னல் ஜீவன் ஜீவராசிகள்
ஜலகண்டேஸ்வர் ஜெகந்நாதன் ஜெயராஜ் ஜெயராமன் இப்படி அடுக்கிக் கொண்டே
போகலாம். அதேபோல் ஸ்ரீ நிவாசன் ஸுப்பிரமணி ஸன்முகம் ஸுரேஷ் ரோஜாஹரீஷ் ஹனுமன்
திராட்க்ஷை. என்று எழுதி வந்தார்கள். பாரதியின் பெயரைக்கூட அவர் ஸுப்பிரமணி
பாரதி என்றுதான் எழ்தினார். ஏன் எல்லாப் புலவர்களும் இந்த வடமொழி எழுத்துக்களை
அப்படியே எழுதித்தான் வந்திருக்கிறார்கள். கம்பன் ஹிருதயம் என்றும் ஜானகி என்று
எழுதியதை இதயமென்றும் சானகி என்றும் பிற்கால பிரகஸ்பதிகள் ((பிரும்மா)
திருத்தியுள்ளார்கள்.
மேலும் தற்கால தமிழர்கள் எல்லாவற்றையும் தமிழ் படுத்துகிறேன் என்று புறப்பட்டார்கள்
வெளிநாட்டு விஞ்சனிகளின் கண்டு பிடிப்புகளுக் கெல்லாம் அவர்கள் வைத்த பெயர்களை
எல்லாம் நீக்கி கணினி செயலி கட்டுப்பாட்டு உந்து சந்து பொந்து என்று அவர்கள்
இஷ்டத்திற்கு பெயர் வைக்கிறார்கள். கம்ப்யூட்டர் , சாப்ட்வேர், அப்ளிகேஷன் என்று
அப்படியே ஏன் எழுதக்கூடாது. அவர்கள் கண்டு பிடுப்புகளெல்லாம் பெயற்சொற்கள்
தானே ஸர்மா விஷால் கிரீஷ் ரித்தீஷ் ஸலாம் ஷாஜஹான் ஜோஸப் ஜேம்ஸ் இப்படிப்
பெயர்களையெல்லாம் சர்மா விசால் ரித்திச் சலாம் சாசகான் சோசப் சேம்ச் என்றால்
நல்லது என்று யாரும் ஏற்க மாட்டார்கள். கிருத்துவர் களும் முஸ்லீம்களும் தமிழர் மதத்தை
வேண்டாமென்று துறந்து வேறு மதம் போனார்கள் அவர்களின் பெயரின் உச்சரிப்பை
மாற்றிட அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? ஒப்பார்கள் Berty N Dezowzaa என்ற கிருத்துவப்
பெயரை பெர்ட்டியென் டிசௌசா ( pertiyen dichow chaa )என்றால் சரிபட்டு வருமா?
தமிழ் சிறந்த மொழி . இலக்கியம் இலக்கணவளம் மிக்க மொழிதான் ஆனால் தமிழன்
பிறநாடுகளுடன் தொடர்புகொள்ள தமிழன் இந்த க்ஷ ஷ ஸ ஜ ஹ எழுத்துக்களில்லாமல்
தொடர்புகொள்ள முடியாது. தமிழ்மொழி தனிப்பட்ட தனியான மொழி. உலகின் மொழிகளின்
உச்சரிப்பை தமிழ்மொழிகொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. இதைத் தெரிந்துதான்
கம்பன் இளங்கோ மற்றுமுள்ள புலவரெல்லாம் வடமொழி எழுத்துக்களான க்ஷ ஷ ஸ ஜ ஹ
எழுத்துக்களை கையாண்டுள்ளார்கள். உண்மையில் சேர சோழர்களைத் தமிழர்கள்
chera chozhar என்றுதான் அழத்தார்களேத் தவிற sera sozha என்றல்ல.
பாரத சுதந்திரத்திற்குப் பிறகு தமிழை வைத்து பிழைப்பு நடத்த வந்த கும்பல்கள்
மக்களுக்கு திராவிடமென்றும் தமிழென்றும் மாற்றி மாற்றி வெறியேற்ற வடமொழி
எழுத்துக் களெல்லாம் எங்கெங்ங்கிருப்பினும் தேடிப்பிடித்து எழுத்தை மாற்றினார்கள்.
புதிய இலக்கியங்கள் ஏதும் இயற்றாமல் அழிந்த இலக்கியங்கள் எதையும் தேடிக்
கண்டுபிடிக்காமல் வடமொழி கலப்பை நீக்கியும் வடமொழியைத் தொடர்ந்து மக்கள்
வெறுக்கும்படி செய்து மக்களின் சிந்தனையை அவர்கள் பக்கம் திருப்பி ஆட்சிபிடித்து
ஐம்ப தாண்டு களுக்குமேல் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்கள்.. தெனார்காட்டை தாண்டி
யாரும் திருச்சி ஜங்ஷன் என்று சொல்ல மாட்டார்கள். திருச்சி சங்க்சன் என்பார்கள்.
பிறமொழி உச்சரிப்பையுங் கூட கற்றுக்கொள்ள விடமாட்டார்கள்..
ஆனால் இப்போது பிறமொழி உச்சரிப்பை அப்படியே பெயர்த்து பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் தாலுகா தாலுகா விற்கு தமிழ் உச்சரிப்பு மாறுவதைக் காணமுடியும்.
ஆனால் பிறமொழி உச்சரிப்பு கூடா தென்பது எந்தவிதத்தில் ஞாயம்? வீட்டு விசேஷத்தை
வீட்டு விசேடம் என்கிறான் ( சேடன் என்றால் பிஷப் பாம்பு) தமிழனே தமிழை மதத்தை
மொழியைத் மறந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் உருது அல்லா கிருத்து அனைவரிலும்
கலந்த பின்பு தனிதமிழுக்கு யார் மதிப்பு கொடுக்கப் போகிறார்கள். தமிழ் என்பவனைப்
பற்றி விசாரி யுங்கள் அவன் தெலுங்கனாகவோ முஸ்லீமாக வோ கிருத்துவனாக வோ
இருப்பான். மாதத்தில் உறவாடுகிறான் மொழியில் உறவாடக் கூடாதா ? இதென்ன
ஞாயம் சொல்லுங்கள்.